கண் கொடை அல்லது கண் தானம் என்பது ஒருவர் இறந்த பின்பு அவருடைய கண்களைத் தானமாக அளிப்பதாகும். தானமாகப் பெறப்பட்ட கண்கள் சோதனைகளுக்குப் பின்பு அதற்கான பாதுகாப்புகளுடன் வைக்கப்படுகிறது. தானமாகப் பெறப்பட்ட கண்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காக கண் வங்கிகள் செயல்படுகின்றன.
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கமும், பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர்வுக்குழுவும் இணைந்து கடந்த 5 ஆண்டுகளில் 298 பேர்களிடமிருந்து கண்களை தானமாகப் பெற்றுள்ளது. ஒருவரின் இரண்டு கண்களும் நான்கு பேருக்கு பொருத்தப்பட்டு 298x4=1192 பேருக்கு பார்வை கொடுத்துள்ளது என்று தெரிவித்துக் கொள்வதில் பெருமைப் படுகிறோம். இந்த அரிய சேவைக்காக பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர்வுக்குழு நிறுவனர் அரிமா KRP இளங்கோ அவர்களுக்கு ஆண்டுதோறும் பல விருதுகள் பல்வேறு அமைப்புகள் வழங்கி வருகின்றன.
328- வது *கண் __ தானம்
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க உறுப்பினரும், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- முத்துச்சாமிபுரம் பஞ்சாயத்து தலைவி திருமதி Ln A . செல்வி கணேஷ் அவர்களின் தாய் செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை திருமதி D. கஸ்தூரிபாய் ( ஓய்வு ) -செல்வ விநாயகபுரம்- பாவூர்சத்திரம் அவர்கள்