குழந்தைகள் தின விழா
பாவூர்சத்திரம் செட்டியூர் சாலையில் உள்ள மாளவிகா வித்யா கேந்திரம் பள்ளியில் குழந்தைகள் தின விழா பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் சார்பாக கொண்டாடப்பட்டது. இன்நிகழ்ச்சிக்கு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் பொருளாளர் Ln S. பரமசிவம் அவர்கள் தலைமை தாங்கினார்கள். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் உறுப்பினர் Ln P. அருணாசல முத்துச்சாமி அவர்கள் முன்னிலை வைத்தார்கள்.பள்ளி நிர்வாகி திரு பிச்சையா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் உறுப்பினர் Ln A.லட்சுமி சேகர் அவர்கள் தொகுப்புரையாற்றினார்கள். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவர் Ln K.R.P.இளங்கோ அவர்கள் குழந்தைகள் தின வாழ்த்துரை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்கள். ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்கள்.மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளியின் செயலாளர் திரு செல்வம் அவர்கள் நன்றியுரை ஆக்கினார்கள்.