நவம்பர் 21 முதல் 30 வரை: நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் கண்தான விழிப்புணர்வு செயல்பாடுகள்.
பாவூர்சத்திரம் சுற்று வட்டாரப் பள்ளிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில், கண்தான விழிப்புணர்வு பற்றிய சுற்றறிக்கைகள் வழங்கியும், தமிழ் ‘ழ’ கரம், வேதாத்திரிய மகரிஷியின் எளிய உடற்பயிற்சி போன்ற பல விதமான தலைப்புகளில் மாணவர்களுடைய தனித்திறனை வளர்க்க பேசி உதவி வருகிறோம்.
இந்த ஆண்டு அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவரும், பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர்வுக் குழு நிறுவனருமான அரிமா கே.ஆர்.பி.இளங்கோ அவர்கள் செய்து தந்தார்கள். அதன்படி, மேலப்பாவூர், அச்சன்புதூர், நெடுவயல், செட்டியூர் அருகே உள்ள பனையடிப்பட்டியில் நடைபெற்ற பாவூர்சத்திரம் த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பங்கேற்ற நாட்டு நலப்பணித் திட்டத்தில் (NCC Camp) சிறப்பாக சேவைகள் பல செய்துள்ளோம்.