நவம்பர் 10. இலவச கண் பரிசோதனை முகாம்
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண்தான விழிப்புணர்வு குழு இணைந்து புனித அருளப்பர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் அபர்ணா அவர்கள் 2546 மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்தார்கள். இதில் 116 மாணவ, மாணவிகளுக்கு கண் குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டது. மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது. அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் திரு மரியகிளிண்டன் அவர்கள் ஏற்பாடு செய்தார்கள்.