நவம்பர் 6. : மணி மண்டல மாநாடு:
6-11-2022 ஞாயிற்றுக்கிழமை நமது மணி மண்டல மாநாட்டுக்கு காலை 7:00 மணிக்கு அலுவலகத்தில் இருந்து இரண்டு வேன்களில் புறப்பட்டு 30 உறுப்பினர்கள் மாநாட்டில் பதிவு செய்யப்பட்டு தங்கள் குடும்பத்தோடு சென்று வந்தோம். பாளை எல் எஸ் மகாலில் (கோர்ட் எதிர் புறம்) வைத்து மிகவும் சிறப்போடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பன்னாட்டு இயக்குனர் Ln.R.மதனகோபால் PMJF அவர்கள் நமது 324 A மாவட்ட ஆளுநர் அவர்கள் முன்னாள் கூட்டு மாவட்ட தலைவர் மற்றும் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் வணக்கத்திற்குரிய தி. லி. மாநகராட்சி மேயர் அரிமா சரவணன் அவர்கள் 324 A மண்டல தலைவர்கள் வட்டார தலைவர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.