பாவூர்சத்திரத்தில் கண்தான விழிப்புணர்வு பேரணி
கண்தான விழிப்புணர்வு குழு,பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது .இந்நிகழ்ச்சிக்கு அரவிந்த் கண் மருத்துவமனை ஆலோசகர் Dr.R. ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் .Ln S.பரமசிவன்,திரு A. முருகேஷ் ,V.T. மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கண் தான விழிப்புணர்வு குழு நிறுவனரும், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவருமாகிய Ln K.R.P.இளங்கோ அவர்கள் தொகுப்புரை ஆற்றினார்கள் .கண் தான விழிப்புக் குழு தலைவர் முனைவர் Ln த.அருணாச்சலம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்.பாவூர்சத்திரம் சுசிலா மருத்துவமனை நிறுவனர் Dr.s. குணசேகரன் அவர்கள் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்கள் .குரு பாராமெடிக்கல் நர்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் அப்போலா மிட் ஸ்கில்ஸ் பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்