ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்:
ஆசிரியர் தினவிழா பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் சார்பாக ஆசிரியர் தினவிழா தென்காசி 7வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவர் Ln K.R.P.இளங்கோ அவர்கள் தலைமை தாங்கினார்கள். 7வது வார்டு தென்காசி நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி டே.ஜேனட் பொருள் செல்வி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்.