பசிக்கு உணவு.
விஏ நகர் ஏழை மக்கள் மற்றும்
முதியோர் இல்லம், அடையக்கருங்குளம்.
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தலைவரும் பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர்வுக் குழுவின் நிறுவனருமான அரிமா KRP இளங்கோ அவர்களின் மாமனார் வி.ஏ. நகர் என்ற ஒரு ஊர் உருவாவதற்கு காரணமாக தன்னுடைய நிலத்தை இலவசமாக ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா செய்து கொடுத்த வி.ஆறுமுகநாடார் அவர்களின் நினைவு நாளான இன்று, அரிமா KRP இளங்கோ அவர்கள் செலவில் அடையக்கருங்குளத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள 50 முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கினோம். அரிமா KRP இளங்கோ அவர்களின் குடுப்ப உறுப்பினர்களுடன் மரக் கன்றுகளும் நட்டு பெருமை சேர்த்தனர். அவர் தனது மாமனாருக்கு சிலை வடித்து ஆண்டுதோறும் வி.ஏ.நகர்பகுதியில் இருக்கின்ற ஏழை மக்களுக்கு உணவு பொட்டலங்கள் கொடுத்து சேவை செய்தார்கள். தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் மரக்கன்றுகளும் நட்டார்.