57 வது இலவச கண்சிகிச்சை முகாம்:
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் மற்றும் கண்தான விழிப்புணர்வு குழு இணைந்து கீழப்பாவூர் குருசாமி கோவில் இளைஞரணி நிதி உதவியுடன் இலவச கண் சிகிச்சை முகாம் சரியாக எட்டு மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற்றது.
இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஒரு ஆட்டோவில் மைக்செட் கட்டி பக்கத்து கிராமங்களில் நோட்டீசுடன் அறிவித்தோம்.
திருநெல்வேலி அரவிந்த் கண்மருத்துவமனை மருத்துவர்கள் குழு மற்றும் செவிலியர்கள் பாவூர்சத்திரம் அரவிந்த் மருத்துவமனை செவிலியர்கள் கண்புரை உள்ள முதியவர்களைக் கண்டறிந்து அவர்களை திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை செலவிலேயே அழைத்துச் சென்று இலவசமாக கண்புரை அறுவைச் சிகிச்சை செய்து அடுத்த நாள் அவரவர் ஊரில் வீடுகளில் பத்திரமாக இறக்கி விட்டுச் செல்கின்றனர்.
இன்றைய கண்சிகிச்சை முகாமில் 165 பேர்களின் கண்கள் பரிசோதிக்கப்பட்டு 23 கண்புரை நோயாளிகள் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கும் மருத்துவர்கள் செவிலியர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கினோம்.