Peace Poster Activity

Venue : SSV Sr.SEc.School, Maathapattinam
Date : November 12, 2021
Duration : 3.00 hours

பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பாக Peace poster Contest  அமைதி சுவரொட்டி போட்டி)  (2021-2022) ஆம் ஆண்டு உலக அமைதிக்கான போட்டி நவம்பர் 12ஆம் தேதி காலை 11.00 மணிக்கு மாதாப்படணம், சத்திய சற்குண வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில், நடைபெற்றது.   இந்தப் போட்டியில்  11 வயது முதல் 13 வயது வரை அதாவது 16 -11 - 2007 முதல் 15 -11- 2010 வரை பிறந்த மாணவ மாணவிகள் மட்டுமே கலந்து கலந்து கொள்ள முடியும் என்ற வியின்படி நடைபெற்றது. போட்டியை பள்ளித் தலைமை ஆசிரியை திருமதிJ.அமிர்த சிபியான் அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்கள். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க முன்னாள் தலைவர் அரிம K.கௌதமன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். ஓவிய ஆசிரிர் திரு L. சண்முக சுந்தரம்  அவர்கள் சிறப்பாக நடத்தினார்கள். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க முன்னாள் செயலாளரும் பள்ளி ஆசிரியருமான அரிமா R.கலைச்செய்வன் அவர்கள் போட்டிக்கான முழு ஏற்பாட்டையும் சிறப்பாகச் செய்தார்கள். போட்டியின் சிறப்பு அழைப்பாளராக 324 - A மாவட்டத்தின் Peace poster Contest  (அமைதி சுவரொட்டி போட்டி) மாவட்டத் தலைவர் முனைவர் அரிமா த.அருணாச்சலம் என்ற அந்தமான் அருண் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். அவர் தமது உரையில் பள்ளித் தலைமை ஆசிரியர், ஓவிய ஆசிரியர், அரிமா R.கலைச்செல்வன், அரிமா K.கௌதமன் மற்றும் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க உறுப்பினர்கள் அனைவரையும் பாராட்டினார்கள். சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் தொகுப்புரை ஆற்றினார்கள். போட்டியில் கலந்து கொண்ட மானவ மாணவிகளுக்கு சான்றிதழும் கலர்பென்சில்களும் வழங்கப்பட்டது.