குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் கண்தான விழிப்புணர்வு முகாம்.:
நமது ஆளுநர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மூன்று செயல்களான புதிய உறுப்பினரை சேர்த்தல், LCIF க்கு 50 டாலர்கள் செலுத்துதல் மற்றும் குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு ஆகிய மூன்று செயல் திட்டங்ககில் மூன்றாவது திட்டமான குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு செப்டம்பர் மாதம் 28 இல் காலை 11.00 மணிக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அரிமா டாக்டர் V.G.ராஜு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு பற்றி பேசினார். அத்துடன் கண்தான விழிப்புணவுக்குழு நிறுவனர் அரிமா KRP இளங்கோ அவர்கள் கண்தான விழிப்புணவு பற்றி உரையாற்றினார்கள்.