பழ மரக்கன்றுகள் நடுவிழா

Venue : பாவூர்சத்திரம் இந்து துவக்கப்பள்ளி
Date : November 17, 2021
Duration : 1.00 மணி

ஏன் கனி தரும் மரங்கள் மட்டும் இல்லை ?

 

அரசும் மீடியாவும்பிரபலங்களும்...'மரம் நிழல் தரும், காற்று தரும், மழை தரும்'னு சொல்லுவாங்க...!

ஆனா  "கனி தரும்னு மட்டும்" சொல்லவே மாட்டாங்க.

ஏன்?

இப்ப சாலையோரம் வைத்திருக்கும் மரம்,

அரசுப் பள்ளி,

 மருத்துவமனை,

 அலுவலகங்கள்

 இங்கெல்லாம் இருக்கும் மரங்களைக் கவனியுங்கள்.... அங்கு கனி தரும் மரங்கள் எதுவுமே  இருக்காது.

சிந்தனையைத் தொடர்ந்து

அடுத்த இரண்டு நிமிடங்களில் நமது மாவட்டத்தின் முதல் பெண் முன்னாள் ஆளுநர் அரிமா சுதந்திரலட்சுமி அவர்கள் கைபேசியில் அழைத்து “ தலைவரே நாகர்கோவிலைச் சேர்ந்த நமது 324-A சுற்றுச்சூழல் மாவட்டத் தலைவர் ( DC ) அரிமா திருமதி மாலதி அலைக்சாண்டர் அவர்களுடன் நாங்களும் குற்றாலம்  வந்து மரக்கன்றுகள் நட்டுக் கொண்டு இருக்கிறோம். உங்கள் சங்கத்துக்கு  மாலை 3.00 – 4.00 மணிக்குள் வரவிருக்கிறோம். மரக்கன்றுகள் நடவாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டார் உடனே மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டு சங்க நிர்வாகி அரிமா KRP இளங்கோ அவர்களிடமும்  செயலாளரிடமும் கலந்து  கடையம் சாலை  V.A. நகர் அருகே சரியான இடம் அமையாததால் பழமரங்களை பாவூர்சத்திரம் சந்தைக்கு அருகிலுள்ள  இந்து துவக்கப், பள்ளியில் நடுவதென முடிவு செய்தோம்.

அதன்படி

17-11-2021 மாலை 5.00 மணிக்கு முன்னாள் ஆளுநர் அரிமா சுதந்திரலட்சுமி அவர்கள், முன்னாள் ஆளுநர் அரிமா SR என்று அழைக்கப்படும் டாக்டர் S.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நாகர்கோவிலைச் சேர்ந்த நமது 324-A சுற்றுச்சூழல் மாவட்டத் தலைவர் (DC) அரிமா திருமதி மாலதி அலைக்சாண்டர் மற்றும் அவரது கணவரும் நாகர்கோவில் ராயல்கிங்க்ஸ் அரிமா சங்கத் தலைவருமான அரிமா மெர்லின் அலைட்சாண்டர், அதே சங்கத்தைச் சேர்ந்த அரிமா சுந்தர்ராஜ் அலைட்சாண்டர், ஈத்தாமொழி சென்ட்ரல் அரிமாசங்கத் தலைவர் அரிமா N.மோகன்லால் பாபு MJF, ஆரல்வாய்மொழி அரிமா சங்கத்திலிருந்து அரிமா P.மோகன்தாஸ் ஆகியோர் வந்தனர்.

பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் முனைவர் அரிமா .அருணாச்சலம் என்ற அந்தமான் அருண் அவர்கள், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க நிர்வாகி  அரிமா KRP இளங்கோ, செயலாளர் அரிமா T.சுரேஷ், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க முன்னாள் செயலாளரும் பட்டைய உறுப்பினரும் பள்ளி ஆசிரியருமான அரிமா R.கலைச்செய்வன் ஆகியோர் கலந்து கொண்டு ஐந்து பழமரக் கன்றுகளை பள்ளி வளாகத்தினுள் நடப்பட்டது.

இந்த விழா பழமரக்கன்றுகள் நடும் துவக்க விழாவாகவும் 2021 டிசம்பருக்குள் 1000 பழ மரக் கன்றுகளை,

அரசுப் பள்ளி,

 மருத்துவமனை,

அலுவலகங்கள் 

பஞ்சாயத்து அலுவலகங்களில்

நட இருப்பதாக பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் முனைவர் அரிமா .அருணாச்சலம் என்ற அந்தமான் அருண் அவர்கள் தெரிவித்தார்.