ஆளுநர் வருகை தின விழா:
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க முப்பெரும் விழா
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் ஆளுனர் வருகை தின விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சமுதாயத்தில் சேவை புரிந்தோருக்கு விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா கீழப்பாவூர் குருசாமி கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தலைவரும், கண்தான விழிப்புணர்வு குழு நிறுவனரும்,324A அரிமா மாவட்ட கண்தான ஒருங்கிணைப்பாளருமான Ln K.R.P.இளங்கோ அவர்கள் தலைமை வகித்தார்கள்.
உடல்தானம், ரத்ததானம், மருத்துவம், கல்வி,காவல்துறை, முதியோர் உதவித்தொகை, விளையாட்டு துறை, ,மரக்கன்று நடுதல், பத்திரிக்கைத்துறை , பனைவிதை விதைத்தல், கனிமவளம், பாரதிக்கு விழா, காமராஜருக்கு விழா, மரக்கன்று வளர்த்தல் போன்ற சிறந்த சேவை புரிந்தோருக்கு, 324 A மாவட்ட ஆளுனர் Ln N.K..விஸ்வநாதன் அவர்கள் விருதுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள்.
தையல்எந்திரம், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம், சாரண இயக்க மாணவியருக்கு சீருடை, நலிவுற்ற, பார்வையற்றோருக்கு உதவித்தொகை மற்றும் அரிசி, சேலைகள் ஆகியன வழங்கப்பட்டன.