பாவூர்சத்திரம், ஔவையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆதார்கார்டு திருத்த முகாம்.
பாவூர்சத்திரம் த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதார் கார்டு திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாவூர்சத்திரம் துணை அஞ்சல் அதிகாரி திரு J. ஜெயக்குமார் அவர்கள் தலைமை தாங்கினார்கள் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க உறுப்பினர் Ln K.P தங்கராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். த.பி.சொ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு சுந்தரகுமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள் . ஓவியஆசிரியர் திரு த. தமிழன் அவர்கள் தொகுப்புரையாற்றினார்கள் . பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவரும் கண்தான விழிப்புணர்வு குழு நிறுவனரும் 324-A மாவட்ட கண் தான ஒருங்கிணைப்பாளர் ஆகிய Ln K.R.P.இளங்கோ அவர்கள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க பொருளாளர் Ln S.பரமசிவன் அவர்கள் நன்றி உரையாற்றினார்கள் .