மூன்று பள்ளிகளில் குடியரசு தின விழா

Venue : அமர்சேவா சங்க சரஸ்வதி வித்யாலயா பள்ளி, திரு சுந்தரவேல் நடுநிலைப்பள்ளி, தெற்கு பூலாங்குளம், ஆவுடையானூர் மேல் நிலைப்பள்ளி.
Date : January 26, 2023
Duration : 2+1+1=4 மணி நேரம்

மூன்று பள்ளிகளில் குடியரசு தின விழா

 

2023 ஜனவரி 26 ஆம் நாள் நமது இந்திய நாட்டின் குடியரசு நாள். குடியரசு நாளில் மூன்று இடங்களில்  பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பாக  தேசியக்கொடியை ஏற்றி கண்தானம் பற்றி பேசப்பட்டது.

  1. பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா  சங்கத்தின் தலைவர் Ln K.R.P. இளங்கோ அவர்கள், தான் படித்த ஆவுடையானூர் பள்ளியில் நம் நாட்டுக் கொடியை ஏற்றி கண்தானத்தின் சிறப்பை பேசினார்.
  2. குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு ஆய்க்குடி, அமர் சேவா சங்கத்தின் சிவ சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவர் முனைவர் அரிமா . அருணாச்சலம் அவர்கள் நம் நாட்டு கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்கள். அவருடன் அவர் துணைவியார் திருமதி சௌந்தராபாய் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினர்.

விழாவில் சிவ சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியின் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் ரா மணிகண்டன் என்ற மாணவன் தான் பென்சிலால் மகாத்மா காந்தியின் படத்தை வரைந்து நமது அரிமா சங்க முன்னாள் தலைவர் முனைவர் அரிமா அருணாச்சலம் அவர்களுக்கு அமர் சேவா சங்கத்தின் செயலாளர் திரு எஸ் சங்கர் ராமன் அவர்கள் முன்னிலையில் வழங்கினான்.

  1. குடியரசு தின விழா  அரிமா சங்க உறுப்பினர் Ln . ஜேசுராஜா ஆசிரியர்  அவர்கள் பணிபுரிகின்ற தெற்கு பூலாங்குளம்  திரு சுந்தரவேல் நடுநிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா  சங்கத்தின் தலைவர் Ln K.R.P. இளங்கோ அவர்கள், நம் நாட்டுக் கொடியை ஏற்றி கண்தானத்தின் சிறப்பை பேசினார்.