பாவூர்சத்திரம் ஔவையார் பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு அச்சுப்பொறி வழங்கும் விழா
பாவூர்சத்திரம் ஔவையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அச்சுப்பொறி வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவரும், கண்தான விழிப்புணர்வு குழு நிறுவனரும், 324-A மாவட்ட கண்தான ஒருங்கிணைப்பாளராகிய Ln K.R.P. இளங்கோ அவர்கள் தலைமை தாங்கினார்கள் .
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க பொருளாளர் Ln S. பரமசிவம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் Ln. த. தமிழரசி ஆகியோர் முன்னிலை .வகித்தனர். தலைமை ஆசிரியை திருமதி தா.ம. ஜான்சி ராணி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள் .ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர் திரு ஆ. எழில்வாணன் அவர்கள் தனது சொந்த செலவில் பள்ளிக்கு அச்சுப்பொறி வழங்கினார்கள் .
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் திருமதி சீ.காவேரி சீனித்துரை , பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி M.ஆனந்த செல்வி , மேலாண்மை குழு உறுப்பினர் திரு இரா.சாக்ரடீஸ் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் திரு S. சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் .ஆசிரியர் திரு S.சிவபார்வதிநாதன் அவர்கள் நன்றியுரை கூறினார்கள் .பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க உறுப்பினர்கள் Ln C. ஆனந்த் ,Ln V.சுப்புராஜ்,Ln K.P. தங்கராஜ் , Ln Dr K.S.சினேகா பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர் .