நவம்பர் மாத முதல் உடல்தானம்
மருத்துவம் படிக்கின்ற மாணவர்க்கு மனித உடல் பற்றிய கற்றலுக்கு மனிதனின் முழு உடல்தானம் பயன்படுகிறது. கண்தானமும் முழு உடல்தானமும் மனிதன் இறந்த பிறகு செய்யப்படுவது.
பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர்வுக்குழுவும், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கமும் இணைந்து 2019 முதல் முழு உடல்தானம் குறித்த விழிப்புணர்வை அரிமா நண்பர்களிடையேயும் பொது மக்களிடையேயும் பேசி வந்தோம். அதன் பலன் முழுஉடல்தானம் முதன் முதலாக நவம்பர் மாதம் கிடைத்துள்ளது. கீழப்பாவூர் ARR அவர்களின் தாயார் இரா.இராமலட்சுமி அவர்களின் முழு உடலை தானமாகப் பெற்றுள்ளோம்