பாவூர்சத்திரம் த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் செட்டியூர் அருகே பனையடிப்பட்டியில் நாட்டுநல பணித்திட்டம் (NSS) முகாம் அமைத்திருந்தார்கள். இந்த முகாம் இன்று நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவரும், கண் தான விழிப்புணர்வு குழு நிறுவனரும், 324-A மாவட்ட கண்தான ஒருங்கிணைப்பாளராகிய Ln K.R.P. இளங்கோ அவர்கள் கண்தான விழிப்புணர்வு உரையாற்றினார்கள். மாணவர்களுக்கு கண்தான விழிப்புணர்வு சுற்றறிக்கை வழங்கப்பட்டது.