சிவநாடானூர் இந்து நடுநிலைப்பள்ளியில் 14-11-2021) காலை 8.30 மணி முதல் 1.30 மணி வரை கண் தான விழிப்புணர்வுக் குழு, பாவூர்சத்திரம், வின்னிங் ஸ்டார் வாக்கிங் குரூப், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் இணைந்து 52 வது இலவச கண்புரை பரிசோதனை முகாம் நடைபெற்றது. திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் கண்பரிசோதனை செய்தனர். 117 பேருக்கு செய்யப்பட்ட கண்பரிசோதனையில் 13 பேருக்கு கண்புரை கண்டறியப்பட்டு திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு இலவச கண்புரை அறுவைசிகிச்சை செய்யப்படும்.